நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 15, 2018

ரணிலின் அமைச்சரவைக்குள் நுளையும் மைத்திரியின் அதி முக்கியஸ்தர்கள்

Saturday, December 15, 2018
Tags


ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களுக்கான அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும், குறித்த ஆறு பேரும் ஒரு கட்சியாக அன்றி, தனி நபர்களாகவே அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ள போவதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.தே.க.யுடன் இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஒரு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும், அரசாங்கத்தில் இணையும் உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.