நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

அரச புதல்வர்களின் கோரிக்கைக்கு இணங்க செயற்பட முடியாது!

Friday, December 28, 2018
Tags


அரச புதல்வர்களின் தேவைக்கு இணங்க, நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்ர மேலும் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் எதிர்க்கட்சி என்று எது உள்ளது? மொட்டு என்றக் கட்சியே இன்று நாட்டில் இல்லாது போய்விட்டது. எனக்குத் தெரிந்த வகையில் இரா. சம்பந்தன் தான் இன்னும் எதிர்க்கட்சித் தலைராக இருக்கிறார்.

இன்று தமிழர்கள் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அது உண்மையில் பாரிய மாற்றமொன்றாகத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே நாட்டில் இருக்கிறது. எனவே, பிரச்சினைகளை அவர்தான் தீர்த்து வைப்பார். எமக்குள் சில பிரச்சினைகள் இருந்தாலும், நாம் அதனை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வோம். இதில் பிரச்சினையில்லை.

மேலும், மாகாணசபைத் தேர்தலை பிற்போடுகின்றமை தொடர்பில் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாமதத்துக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். மாகாணசபைத் தேர்தலை நாம் வெகுவிரைவில் நடத்துவோம். மாறாக பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.

இந்த நாடாளுமன்றுக்கு 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்வரை ஆயுள் உள்ளது. அரசமைப்புக்கு உட்பட்டுத்தான் இவ்விடயங்களில் செயற்பட வேண்டும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஒருசிலரின் தேவைக்காக பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கத்தால் முடியாது. அதற்கான தேவையும் இல்லை.

சிலருக்கு எதிர்க்கட்சியில் இருக்க முடியாது போயுள்ளமையால், மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரும் நோக்கிலேயே பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் மன்னராட்சி அல்ல. அரச புதல்வர்களின் கோரிக்கைக்கு இணங்க எம்மால் செயற்பட முடியாது.