நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

தேனிலவின்போது இலங்கையில் சுனாமியிடம் குழந்தையை பறிகொடுத்த பிரித்தானிய பெண்: இப்போது செய்யும் நெகிழ்ச்சி செயல்

Monday, December 31, 2018
Tags
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு சென்றிருந்தபோது அவர் கையிலிருந்த குழந்தையை பறித்துச் சென்றது சுனாமியின் கோரக்கரங்கள்.

14 ஆண்டுகள் மனதில் மறைத்து வைத்திருந்த அந்த வேதனையை மீண்டும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது, இந்தோனேஷியாவை இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தாக்கிய சுனாமி என்கிறார் அந்தப் பெண்.

Kim Peatfield தனது கணவர் Tristan மற்றும் தனது ஒரே மகள் Isabellaவுடன் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தார்.

குடும்பமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை குதூகலமாக கொண்டாடி முடித்த குடும்பத்தினர், மறு நாள் காலை, காலை உணவுக்காக தயாராகிக் கொண்டிருக்கும்போது, கடலிலிருந்து பிரமாண்ட அலைகள் தாங்கள் தங்கியிருக்கும் பக்களாவை நோக்கி வருவதைக் கண்டு உடனடியாக கதவை மூடினர்.

ஆனாலும் பயனில்லை, கடல் வெள்ளம் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. மீண்டும் அலைகள் கடலை நோக்கி திரும்பிச் செல்வதை கவனித்த Tristan, வீட்டுக்குள் வந்த தண்ணீர் வெளியேறுவதற்காக கதவைத் திறந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென வந்த ஒரு பேரலை, Kimஇன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த Isabellaவை இழுத்துச் சென்றது.கண்முன்னே குழந்தையை கடல் இழுத்துச் செல்வதை ஒன்றும் செய்ய இயலாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த பெற்றோர்.

நீண்ட நேர கண்ணீருக்கும் கதறலுக்கும் பின், ஒருவாறாக மனதை தேற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போதுதான் தாய், தந்தை, வீடு என அனைத்தையும் இழந்த சில குழந்தைகளைக் கண்டனர் அந்த தம்பதியினர்.

தாங்களாவது ஒரு குழந்தையை மட்டும்தான் இழந்தோம், இங்கே பலர் அனைத்தையும் இழந்து விட்டார்கள் என்பதை உணர்ந்த அவர்கள், ஆதரவற்று நின்ற சில குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.