நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 16, 2018

வடக்கு - கிழக்கில் மக்கள் குடியிருப்புக்குள் கடல் நீர்! ஆபத்தான நிலையில் பல கிராமங்கள்..

Sunday, December 16, 2018
Tagsதிருகோணமலை நகரை சுற்றியுள்ள கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், கடலுக்குச் செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக உயரமான அலைகள் வருவதாகவும், விடுமுறை தினமாக இருப்பதால் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கடலுக்குச் சென்று குளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதான வீதியின் அருகில் அலைகள் வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

மூல்லைத்தீவு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ள நிலையில் முல்லைத்தீவு கடலின் கொந்தளிப்பு தற்பொழுது அதிகமாக காணப்படுகின்றது.

மேலும் குறித்த பிரதேச குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரையோரப்குதி மக்கள் அவதானமாக செயற்படுடமாறு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.