நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

யாழில் பரபரப்பு... விபத்து நிகழ்ந்து வெகுநேரமாகியும் பொலிஸார் வராததால் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள்!காரைநகர் – பொன்னாலை பாலத்தில் தனியார் பேருந்து துவிச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

கடலில் வலை விரித்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் குடும்பத் தலைவர் வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் காரைநகர் பெரியமணலை வதிவிடமாகக் கொண்ட 38 வயதுடைய குடும்பத்தலைவரே படுகாயமடைந்தார். அவர் உடனடியாக வலந்தலை வைத்தியசாலைக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு பிரேத்தியேகமாக ஒட்சிசன் பொருத்தப்பட்டது.அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்ற காரணத்தால் அவசர நோயாளர் காவு வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் ஊர்காவற்றுறை பொலிஸார் 2 மணிநேரமாகியும் சம்பவ இடத்துக்கு வருகைதராததால் இளைஞர்கள் ஒன்றுகூடி தனியார் பேருந்தை இடைமறித்து வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் பாதுகாப்புக்காக கடமையில் உள்ளனர்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!