நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

இலங்கையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

Monday, December 31, 2018
Tags


இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளதாக துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க கூடிய கடவுச்சீட்டுக்களின் விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை முதல் மத்திய கிழக்கு நாடுக்கு மாத்திரம் பயணிக்கும் விதத்தில் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட மாட்டாது.

மாறாக நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் விதத்திலான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.

இந்த கடவுச்சீட்டினூடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என, குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.