நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய் பெறுமதி

Friday, December 28, 2018
Tags


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184.7 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 180.10 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.