நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

கிளிநொச்சி , முல்லைத்தீவு விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

Monday, December 31, 2018
Tags
கடந்த தினத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , வௌ்ளப்பெருக்கால் பயிற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , மீண்டும் குறித்த வயல்களில் பயிற்செய்கையில் ஈடுபட விவசாயிகள் நடவடிக்கை எடுத்தால் , குமிழ் நெல்லை வாங்குவதற்கு 50 சதவீத மானியத்தை பெற்றுக்கொடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் , உர மானியமொன்றையும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.