நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

வடக்கில் விவசாய காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

Sunday, December 30, 2018
Tags


வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும், 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் விவசாயப் பண்ணைகளுக்குப் பயன்படுத்தப்படும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத அரச காணிகளை விடுவிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, வடக்கு மாகாணத்தில், 1,099 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்படும், காணிகள் விடுவிப்பு செயல்முறைக்கு மேலதிகமாக, இந்தக் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்.

பூநகரியில் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் 479 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளது.

அத்துடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வனபாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 120 ஏக்கர் காணிகளும், மாந்தை மேற்கில் 500 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.

2019 ஜனவரியில், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் இது தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.