நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 16, 2018

ரணிலின் முகம் சுழிக்கும் வகையில் நடந்த மைத்திரி! திகைத்துப்போன முக்கியஸ்தர்கள்..

Sunday, December 16, 2018
Tags


முடிந்தால் கடாபிக்கு வந்த நிலையை தனக்கும் வர வைக்கமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று பிரதமர் நியமனம் வழங்கியபின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து அவர் இதனை முகத்தில் அறைந்தாற்போல் கூறியுள்ளார்.

“மத்திய வங்கி மோசடி, இராணுவ வீரர்கள் மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள். 

இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள்.” என்றார்.

இதன்போது அதுகிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் இருந்துள்ளனர்.

ஜனாதிபதியின் மேற்படி உரை இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.