நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதங்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பிரதேச சபைகள் இருக்கிறது எனவும் குறித்த இயந்திரங்களை அவர்களிடம் கையளிக்குமாறும், இராணுவத்தை கொண்டு எல்லாவற்றையும் செய்வதாயின் பிரதேச சபைகளை மூடிவிடுமாறும் ஆதங்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச சபைகளிடம் ஒப்படைத்து ஆக்கள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தையும் எடுத்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.