Monday, December 31, 2018

புதிய ஆண்டு உங்களுக்கு எப்படி அமையப்போகிறது : உங்கள் இராசி எது ?


மேஷம்

மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளி வட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும் உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள்தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கடையை விரிவுப் படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வரக்கூடும். வெளிவட்டாரத் தொடர் புகள் அதிகரிக்கும். புது வேலைஅமையும். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். பிரபலங்களின் நட்பு கிட்டும்.அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக்குறைக்க முடியாமல் திணறுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம்,நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட் களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும்.வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் ஒற்று மை பிறக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரு வித படபடப்புவந்து செல்லும். குடும்பஅந்தரங்க விஷயங்களைவெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல் படவேண்டிய நாள்.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka