நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

மீண்டும் விஜயகலா விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை


கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரனின் காலில் நபர் ஒருவர் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அன்மையில் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் காலில் நபர் ஒருவர் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தினை அவர் தன்னுடைய முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அப்புகைப்படத்தினால் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் விஜயகலா நடந்து கொண்டமை மிகவும் வருந்தத்தக்கது.

தமிழக அரசியல் கலாசாரத்தை இலங்கையிலும் ஏற்படுத்துவதற்கான முயற்சியா இது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கை அரசியலில் குறிப்பாக ஈழ அரசியலில் ஒரு நாகரிகமான தன்மையுண்டு.

அரசியல்வாதிகள் காலில் விழுந்து ஆசி பெறுவது என்பது தேவையற்ற ஒன்று. மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து தங்களுக்கு சேவையாற்றவே நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள்.

ஆனால் பதவியும், அதிகாரங்களும் கிடைத்தவுடன் தங்களை மேலானவர்களாகவும், மற்றவர்களை அடிமைகளைப் போன்றும் நடத்துவது கவலைக்குரியதும் விமர்சனத்திற்கும் உரியதாகவும்.

இதுபோன்ற செயற்பாடுகளை இனிமேலும் அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ செய்துவிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!