நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

ரணிலிடம் மைத்திரியும் மகிந்தவும் பாடம் கற்க வேண்டும்! கடுமையாக விமர்சிக்கப்பட்ட சிறிசேனா

Friday, December 28, 2018
Tags


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட விடையங்களை அரசியலில் புகுத்திக் கொள்கிறார். இது அவருக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் அழகல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இவ்வாறு கடுமையாகப் பேசியுள்ளார்.

இதன்போது அங்கு பேசிய மேர்வின் சில்வா,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியினை அமைதியாக சட்டத்தின் ஊடாக தோற்கடித்தமையின் காரணமாகவே மீண்டும் ஜனாதிபதியால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து ஜனாதிபதி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியினரிடம் ஆட்சியை கௌரவமாக ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் மத்தியில் ஜனாதிபதி பல விமர்சனங்களை தொடுத்தார்.

இது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அழகல்ல, இன்றும் இவர் தனது தனிப்பட்ட வெறுப்புக்களை அரசியலில் முன்னிலைப்படுத்துகின்றார் என்றார்.