நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

யாழை உலுக்கியுள்ள சிற்றூர்தி

Monday, December 31, 2018
Tags

யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய கார் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் மிக நீண்ட தூரம் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரையில் அந்த காரை துரத்திச் சென்று இளைஞர்கள் பிடித்த போதிலும், காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ். சுண்டுக்குளி பகுதியில் இந்த கார் முதலில் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனை அவதானித்த அந்தப் பகுதி இளைஞர்கள் காரை துரத்திச் சென்ற போது, நல்லூர், முடாமவடி, கோப்பாய் பகுதிகளில் வைத்து இந்த கார் பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.

இறுதியாக குறித்த கார் இணுவில் புகையிரத நிலையப் பகுதியில் நிறுத்திவிட்டு காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகளின் போது பெண் ஒருவர் மற்றும் சிறுவர் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.