நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

திருமண பந்தத்தில் இணையும் முக்கியஸ்தர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த சந்தன ராஜபக்ச, தனது காதலியான Tatyanaவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை, ரன்ன ஹோட்டலில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.
வீரக்கெட்டிய கால்டன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமண அழைப்பிதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித்த மற்றும் Tatyana ஆகியோர் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோஹித்தவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், Christmas wedding என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.