நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

இலங்கையில் இப்படியும் சொக்லட் விற்பனையாகிறது - மக்களே அவதானம்.

Sunday, December 30, 2018
Tags


இன்று மட்டக்களப்பில் கடை ஒன்றில் வாங்கப்பட்ட சொக்லேட் பைக்கட்டை பிரித்ததும் புழுக்கள் நெளிநதவாறு வெளியேறியுள்ளது.

காலாவதி திகதி முடிவடைவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறு புழுக்களோடு விற்கப்பட்ட சொக்லட்டை எப்படி சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்படியான புழுக்களை கொண்ட இனிப்பு வகைகளை கொடுக்கும் போது புழுக்கள் சமிபாட்டு தொகுதியை அடைந்து இன்னும் புழுக்கள் இனப்பெருக்கமடைந்து குடல் பூராக பரவி தொற்றுநோய்கள், வயிற்றுபெருக்கு, பசியின்மை, குமட்டல் ,வயிறு விரிந்து காணப்படுவதுடன், மலச்சிக்கலும் உருவாகும்.

எனவே சிறார்களுக்கு எடுத்தோம் பிரித்தோம் சாப்பிட வைத்தோம் என சொக்கலட் வகைகளை கொடுக்கும் பெற்றோர்களே இது உங்கள் கவனத்திற்கு!

ஆனால் இச் சொக்லட் இலங்கைத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.