நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 15, 2018

மஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ

Saturday, December 15, 2018
Tags


பதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது பிரதமர் பதவியினை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியமையால் போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக முடியாமல் போனது.

தவறான பாதையில் தன்னை வழிநடத்திய முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.