நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை மின்சார சபைக்குள் நிலவும் நிதி மற்றும் ஊழியர் முரண்பாடுகளை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இத்தகைய செயற்பாட்டின் போது தொழிற்சங்கள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறான அனைத்து செயற்பாடுகளின் இறுதியில் மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதும், மின் கட்டணங்களை குறைத்து பாவனையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதுமே தனது பிரதான இலக்கு என்றும் தெரிவித்தார்.