நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

முல்லைத்தீவு மக்களுக்கு வெள்ள நிவாரத்தினை வழங்கிய அமைச்சர் சஜித்

Monday, December 31, 2018
Tags
முல்லைத்தீவு மக்களுக்கு வெள்ள நிவாரத்தினை வழங்கிய அமைச்சர் சஜித்
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்காக தேசிய வீடமைப்பு, நிர்மாண மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்பின் பெயரில் கொடுக்கப்படும் நிவாரண பணி நேற்று (31) முல்லைத்தீவு மாவட்ட மன்னாகண்டல் பகுதியில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சி. சிவமோகன் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேசிய வீடமைப்பு நீர்மான அமைச்சர் சஜித் பிரேமதாச, இந்த மாவட்டத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டினை பெற்றுத்தருவேன் என்ற உறுதிமொழியினை மக்கள் மத்தியில் வழங்கினார்.