நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

சபரிமலைக்கு சென்ற பெண் எங்கே? பதறும் கணவர்: நடந்தது என்ன?

Monday, December 31, 2018
Tags


சபரிமலைக்கு சென்ற பெண் மாயமானதாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் உன்னி. இவரது மனைவி கனகதுர்கா (வயது 35). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்தார்.

கடந்த 22-ந்தேதி தனது 2 குழந்தைகளை மற்றும் தோழி பிந்து என்பவருடன் புறப்பட்டார். குழந்தைகளை கோட்டயத்தில் உள்ள தனது தம்பி பரதன் வீட்டில் விட்டுச்சென்றார்.

23-ந்தேதி அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றார். அப்போது பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அவர் கோவிலுக்கு செல்வதை அங்குள்ள டி.வி.க்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

ஒரு கட்டத்தில் பக்தர்களின் எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் அவர் அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை ரத்து செய்து திரும்பினார். அப்பாச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது கனகதுர்காவின் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உடன் சென்ற தோழி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுவரை டி.வி. சேனல்கள் ஒளிப்பரப்பு செய்தன.

கனகதுர்காவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை டி.வி. மூலம் அறிந்த அவரது தம்பி மற்றும் உறவினர்கள் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் அங்கு அவரை பார்க்க போலீசார் அனுமதியளிக்கவில்லை. கனகதுர்காவின் உடல்நலம் சரியான பின்பு நாங்களே மலப்புரம் வரை பத்திரமாக அழைத்து வருகிறோம் என்று கூறினர். இதனையடுத்து அவர்கள் வீடு திரும்பினர்.

ஒரு சில நாட்களுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த கனகதுர்காவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் கோட்டயம் எஸ்.பி.யை போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் உன்னி பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். அய்யப்பனுக்கு மாலை அணிந்து சென்ற மனைவி உடல்நலக்குறைவால் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பார்க்க போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது ஆஸ்பத்திரியிலும் அவர் இல்லை.

கனகதுர்காவின் கதி என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை. அவரை கண்டு பிடித்துதரவேண்டும் என்று புகார் செய்தார்.