நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, December 6, 2018

தமிழர்கள் பலரை வாய்பிளக்க வைத்த வெளிநாட்டவர்! நீரிழிவு நோயை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்?


தூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.அந்த கலையை மிகவும் இலகுவாக செய்து மக்களை தன் பக்கம் ஈர்த்த இளைஞரின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தென்கிழக்காசியாவில் அதிகம் விற்கப்படும் இந்தப் பழத்தை வெட்டி உண்பது சாதாரணமான ஒன்று. ஆனால், அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் பழத்தைச் சரியாக வெட்டும் காட்சி பலரை வாய்பிளக்க வைத்துள்ளது.

அந்தக் காட்சி பதிவாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தென் ஆஸ்திரேலியாவில் உள்ள உட்வில் (Woodville) நகரத்தில் Fruity Fruits 88 என்ற கடையில் சைமன் என்ற அந்த நபர் பணிபுரிந்து வருகிறார்.கடைக்கு விநியோகிக்கப்படும் புதிய வகை பழங்களைப் பற்றி அவர் காணொளிகளில் விளக்கினார். அந்த வகையில், தூரியன் பழத்தை எவ்வாறு வெட்டவேண்டும் என்பதைக் காணொளியில் விளக்கினார்.

சிரமமே இல்லாமல் ஒரே வெட்டில் டுரியானைப் பிளக்கவைத்த அவரது திறமையை இணையவாசிகள் பலரும் பாராட்டுகின்றனர்.அது மட்டும் இன்றி பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தினையும், இதன் நன்மைகளையும் தமிழர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது.

இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது.

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர். இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!