நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

வறுமையான பகுதியில் இருந்து தமிழ் மாணவி சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

Monday, December 31, 2018
Tags
க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் கிளி.கோணாவில் மகாவித்தியாலய மாணவி ஆனந்தகுமார் நிலா இரண்டாம் இடத்தினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவ்வாண்டு நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி.கோணாவில் மகா வித்தியாலயத்திலிருந்து வணிகப் பிரிவில் தோற்றிய மேற்படி ஆனந்தகுமார் நிலா மூன்று ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மேலும் இருவர் கலைப் பிரிவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் ந.தட்சா மாவட்ட நிலை 27, த.தயானுஜா மாவட்ட நிலை 38 ஆகிய இருவருடன் மேற்படி பாடசாலையிலிருந்து மூவர் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து உட்பட்ட வசதி வாய்ப்புக்களற்ற பிரதேசமான கோணாவில் பகுதியிலுள்ள மேற்படி கிளி.கோணாவில் மகாவித்தியாலய மாணவி மாவட்டத்தில் இரண்டாம் நிலையினையும் பெற்றுள்ளமை பாரிய சாதனையாகவே கருதப்படுகின்றது.
மேலும், மாணவிக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.