நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

மனைவியை கொலை செய்த கணவர்!! தந்தையை கொலை செய்த பிள்ளைகள்..

Friday, December 28, 2018
Tags


இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு நீண்டதில் இன்று அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் , ஹிங்குராங்கொடை கவுடுல்ல - கொலனிய கிராமத்தில் சகோதரர்கள் இருவர் இணைந்து அவர்களின் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளனர்.

66 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் குறித்த சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது