Friday, December 28, 2018

யாழ் போதனா வைத்தியசாலையில் சமுக அக்கறை இல்லாத வேலைகள்


யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட துறைக்குள் இடம்பெற்றுவரும் சில குளறுபடிகள் மிகவும் அதிர்சிகரமாக உள்ளது.

ஒரு சில வைத்தியர்களின் சமுக அக்கறை இல்லாத வேலைகள் காரணமாக வைத்தியசாலைக்கு உள்ள நல்ல பெயரில் களங்கம் உண்டாகி வருகிறது.40 வயது மிக்க சங்கானை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக வேலை செய்யும் திருமதி வினோதினி என்பவர் இரு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் சிக்கி தலை மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 22/12/2018 காலை மூச்சு விட கஷ்ட்டப்பட்டு மீண்டும் உறவினர்களால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபடார்.வைத்தியர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் அவர்களினால் பிரேத பரிசோதனை செய்து அவர் ஆஸ்துமா நோயினால் இறந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

அவரின் பிரேத பரிசோதனை முடிவில் அதிருப்தி அடைந்த உறவினர்கள் அவரிடம் விசாரிக்க முற்பட்டபோது உரிய விளக்கம் எதுவும் கொடுக்காமல் தனது பிரேத பரிசோதனை முடிவு சரியென்றும் விருப்பம் என்றால் அனுராதபுரம் அல்லது கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் படியும் தன்னுடைய ஸ்ரைலில் அடத்தாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒரு இலச்சத்திற்கும் மேல் செலவழித்து பிரேதத்தினை கொழும்புக்கு உறவினர்கள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தபோது அதிர்ச்சிகரமான முடிவு கிடைத்துள்ளது.வீதி விபத்தின் காரணமாக அவரின் நுரையீரயில் உள்ள இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கட்டி பட்டதான் காரணமாகவே மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக கொழும்பு சிரேஸ்ட்ட சட்ட வைத்திய அதிகாரி உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ் சட்ட வைத்திய அதிகாரி இம்மரணத்தினை இயற்கை மரணமாக மூடி மறைக்க முற்பட்ட நிலையில் மிகுந்த பண, பொருட் செலவில் நீதி வெளிப்படுத்த பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இச் சட்ட வைத்திய அதிகாரி முன்பும் இவ்வாறான பல சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில் இச்சம்பவம் வெளிவந்து வைத்தியசாலை வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகமும் பணிப்பாளரும் தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் வைத்தியசாலையில் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்கப்பட்டு விடும்.அண்மையில் சிறுமி ஒருவர் பொலிஸ் அதிகாரியால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த சம்பவத்தை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்காது இவர் மூடி மறைத்திருந்தமை தொடர்பாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இவரே பணிப்பாளர் எனும் நினைப்புடன் வலம் வருவதாகவும் ஏனைய உத்தியோகஸ்தர்களை இவர் துளிகூட மதிப்பதில்லை எனவும் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் தொடர்ந்தும் எமக்கு கிடைத்தவண்ணம் உள்ளன.

மேலும் எட்டு இலச்சத்திற்கும் மேல் மாத சம்பளம் பெற்றுக்கொள்ளும் இவர் நாட்டில் இடம்பெறும் பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளிற்கான பிரேத பரிசோதனைகளை தானே எடுத்து நடத்திவந்துள்ளமை பணத்தினை வாங்கி இவ் வழக்கை திசை திருப்பவோ என மிகுந்த சந்தேகத்தி வரவளைத்துள்ளது.உதாரணமாக பல்கலை கழக மாணவர்கள் படுகொலை வழக்கு.

வித்தியா படுகொலை வழக்கு.கர்ப்பிணி பெண் போதனாயகி வழக்கு.சுழிபுரத்தில் 6 வயது சிறுமியின் கொடூர கொலை வழக்குகிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி வழக்குபோன்ற வழக்குகளை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka