நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

ரணில் - சஜித் தலைமையில் ஐ.தே.க வெற்றிப்பெறும்

Friday, December 28, 2018
Tags


அரசியல் நெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சியினர் பணத்திற்கும், முறையற்ற அரசாங்கத்தின் பதவிக்கும் விலைபோகலில்லை, அனைவரும் ஒன்றினைந்தே நீதித்துறையின் ஊடாக ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி முன்னேற்றமடையும் என விஞ்ஞான ,தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

விஞ்ஞான,தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்குற்றார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஐக்கிய தேசிய கட்சி புதிய விடயங்களை வரவேற்கின்றது. 2020ம் ஆண்டுக்கு பிறகு அரசியல் ரீதியில் நிலையான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

நாட்டு தலைவராக இனி ஐக்கிய தேசிய கட்சியினரே தெரிவு செய்யப்படுவார். அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பலருக்கு பல விடயங்களை தெளிவுபடுததுவோம்;. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஐக்கிய தேசிய கடசியே மாறுப்பட்ட ஒரு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும்.