நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

ரணிலின் கடுமையான உத்தரவு...ரணிலின் கடுமையான உத்தரவு...
மத வழிபாட்டு தலங்களை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது இந்த அரசாங்கத்தின் ஊடாக, விசேடமாக கிராமத்துக்கு சலுகைகளை வழங்கும் வேளைத் திட்டத்தையே மேற்கொள்ளவுள்ளோம். எதிர்க்கட்சிகளுடனுடம் தற்போது இதுதொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம்.

மேலும், எந்தவொரு அரசமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அரசமைப்பின் 9 ஆவது உறுப்புரிமைக்கு இணங்க, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மட்டும் மாற்றப்போவதில்லை என்பதையும் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளேன்.

இதேவேளை, இந்து ஆலயமொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. இவ்வாறாக மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக தண்டனை கடுமையாக்கப்படும்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படாத வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!