நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

கடந்த வருடத்தையும் விட இம்முறை அதிகரிப்பு

கடந்த கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இம் முறை சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கவனத்திற்கொள்ளும் பொது கடந்த வருடத்திலும் பார்க்க பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் முதலான பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

இதேபோன்று, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 64.68 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கலை, வர்த்தகம், மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறிகளில் தூர இடங்களில் உள்ள மாணவர்கள் ஆகக்கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

பரீட்சையில் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 19 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.