நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

முல்லைத்தீவு வண்ணான்குளம் கிராமசேவையாளரின் லீலைகள் அம்பலம்!!

Friday, December 28, 2018
Tags
முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேசயலக பிரிவிற்குட்பட்ட வண்ணான்குளம் கிராமசேவையாளர் அருணோதயம் அவர்களின் ஊழல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் பொதிகள் வழங்குவதில் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்களின் பெயர்களை பாவித்தும் ஒரு பெயரை இரண்டு தடவைகளுக்கு மேல் பாவித்தும் 100000 ரூபாவிற்கு மேல் ஊழல் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கிராமசேவையாளரிடம் கேட்டபோது மக்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் இவ் கிராம சேவையாளர் பல ஊழல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடர்பான ஊழல் விசாரணைகள் அரசாங்க அதிபர் அவர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சேவையில் இருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் அரசாங்க அதிபரால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முதல் வண்ணாங்குளம் கிராமத்திற்கு கடமைப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற தினத்தில் இருந்து இன்றுவரை இவர் மீது பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் உடன் நடவடிக்கை எடுத்து தமது கிராமத்துக்கு புதிய கிராமசேவகர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் அக்கிராம மக்கள் கையொப்பம் இட்ட தமது முறைப்பாட்டையும் அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளனர்.