நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

சம்பந்தன் கூறியதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ஆனந்தசங்கரி!

Sunday, December 30, 2018
Tags


2004ம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்த கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்பந்தன் இப்போது ஜனநாயக்தை காப்பாற்றி விட்டதாக தம்பட்டம் அடிப்பதைக்கேட்டு தான் தனிமையில் விழுந்து விழுந்து சிரித்ததாக தமிழா் விடுதலைக்கூட்டணியின் செயலாளா் வீ. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சைக்கேட்டு தோ்தலைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு இந்த அவலநிலை வந்திருக்காது எனவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு சரியானது, ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, நன்மை அடைந்தவா்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினா் மட்டுமே.

அவா்கள் தமது பதவிக்காகவே ரணிலுக்கு கூஜா துாக்கியுள்ளனா், எனவும் தமிழ் மக்களுக்கு ஒருமித்த நாட்டிற்குள் தான் தீா்வு, சமஷ்டி தீா்வு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம். ஏ. சுமந்திரன் கூறிவருகின்றார், அவரை நான் அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை.

அவா் காலையில் ஒரு கதை மாலையில் ஒருகதை கூறுபவா், இவா் தான் விடுதலைப்புலிகளே மக்களை அழித்தவா்கள் என்றும் வேலை இல்லாதவா்களே அந்த அமைப்பில் இருந்தனா் எனவும் கூறியவா், எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த செய்தியாளா் மாநாட்டிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.