நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, December 27, 2018

கரியாலைநாகபடுவான் குளம் வான் பாய்ந்து மக்கள் குடியிருப்புக்குள் வெள்ளம்

Thursday, December 27, 2018
Tags

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரியாலைநாகபடுவான் பண்டிவெட்டிக் குளம் வான் பாய்ந்து மக்கள் குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளமையால் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து இடைந்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளார்கள்.

இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் இன்றைய தினம் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி நிலமைகளை ஆராய்ந்து மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்களின் நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கரியாலைநாகபடுவான் பண்டிவெட்டிக் குளமும் நீர் வரத்து அதிகரித்து வான் பாய்கின்றது.குளத்திலிருந்து பெருமளவு நீர் வெளியேறுகின்றமையால் மக்கள் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் தற்காலிக வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளார்கள்.

மேற்படி கரியாலைநாகபடுவான் பண்டிவெட்டிக் குளம் வான் பாய்கின்றமையால் ஜெயபுரம் தும்புறுவில் கிராமத்தில் ஏற்கனவே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படாதமையால் தற்காலிக கொட்டகைகளில் வசித்து வந்த 50 குடும்பங்களின் இருப்பிடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மக்களின் தற்காலிக வீட்டின் மீது பாரிய மரம் பாறி விழுந்துள்ளமையால் வீடு முற்றுமுழுதாகச் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக மேற்படி 50 குடும்பங்களும் இடம்பெயர்ந்து ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ளன.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் அவ்விடத்திற்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடி நிலைமைகளை அவதானித்து மக்களுக்கு வேண்டிய உடனடி உதவிகளைச் செய்யுமாறும் உரியவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.