நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, December 6, 2018

ரணிலை ஆதரிக்க மாட்டோம் - ரிசாட்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது எமது நோக்கமல்ல என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

மாறாக ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதே தமது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நேற்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்த றிசாட், அதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க என்ற தனிப்பட்ட நபர் மீது எமக்கு ஆர்வமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், ஐ.தே.கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய ஒரே கட்சியாக ஐ.தே.க. காணப்படுகின்ற நிலையிலேயே நாம் அதற்கு ஆதரவளித்து வருகின்றோம்.

அது மாத்திரமின்றி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அரசியலமைப்பு மீறல் என்பது தெளிவாகவுள்ளது. இந்நிலையிலேயே, நாம் ரணிலுக்கு ஆதரவளித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.