நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசியல் சதி திட்டத்தில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல் சதி திட்டத்தில் ஈடுபட்டு வருதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் செயற்பட உள்ளார்களாயின் அதன் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஒரு புறம் கட்சி, நாடு என்பவற்றையும் மறுபுறம் எதிர்காலத்தையும் வீணடிக்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகதாக, ஷெஹான் சேமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.