நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, December 28, 2018

A/L பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் – திங்களன்றுதான் சாத்தியமாகுமாம்

Friday, December 28, 2018
Tags
கடந்த ஓகஸ்டில் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் அதனை வெளியிடுவதில் இரண்டு மூன்று தினங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வரும் 31ஆம் திகதி வெளியிடுவதற்கு சாத்தியம் உள்ளது என பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.