நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, December 4, 2018

ஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்

கைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையிலேயே பலத்த போட்டி நிலவி வருகின்றது.

இதனால் முந்திக்கொண்டு 2020 ஆம் ஆண்டிற்குள் 5G தொழில்நுட்பம் கொண்ட ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

எனினும் தற்போதைய தகவல்களின்படி 2020 ஆம் ஆண்டிற்கு பின்னரே 5G ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

இந்த தகவல் கைப்பேசி பிரியர்களுக்கு சற்று ஏமாற்றம் தருவதாகவே இருக்கின்றது.

இதேவேளை சாம்சுங் நிறுவனம் தனது 5G தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசியினை அடுத்த வருடமே அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் Samsung Galaxy S10 கைப்பேசியானது 5G தொழில்நுட்பம் கொண்டதாகவே இருக்கும் என தெரிகிறது