நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, December 4, 2018

5G வீடியோ அழைப்பு வசதியை வெற்றிகரமாக பரிசீலித்து சாதனை படைத்தது சாம்சுங்

ஆப்பிள் நிறுவனம் தனது 5G வலைமைப்பு தொலைபேசியினை அறிமுகம் செய்வதை பிற்போட்டுள்ளது.

எனினும் சாம்சுங் நிறுவனம் அறிவித்தது போன்றே 2019 ஆம் ஆண்டில் தனது 5G கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பரிசோதனை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது வர்த்தக ரீதியானது முதலாவது 5G வீடியோ அழைப்பு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இப் பரிசீலனை தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.அங்குள்ள SK Telecom நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Park Jung என்பவர் இப் பரிசீலணையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் இவ் வசதியை கொண்ட Galaxy S10 கைப்பேசி தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.