நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, December 29, 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை காப்பாற்றும் முயற்சியில் 4 நாடுகள்

Saturday, December 29, 2018
Tags


இரட்டை குடிமை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பிர்களை காப்பாற்றுவதற்காக 4 வெளிநாடுகள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நாடுகள், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சட்டத்திற்கமைய அந்நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் தகவல்கள் மறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாக மஹிந்த தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.