நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

3000 பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும் ரணில் அரசாங்கம்

Sunday, December 30, 2018
Tags


புதிதாக மூவாயிரம் பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை ராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

இவற்றில் 1000 பஸ் வண்டிகள் நகர்சேர் போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தின் கீழ் 500 பஸ் வண்டிகளை இந்தியாவில் இருந்து தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறிவிக்கும் பொழுதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மூலம் மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.