நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, December 31, 2018

யாழில் நடந்த துயரச் சம்பவம்! பரிதாபமாக 27 மாடுகள் பலி! பின்னணி தகவல் என்ன?

திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 மாடுகள் உயிரிழந்துள்ளன.

தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டு உள்ள நிலையில் கால்நடைப் பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்கந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்குக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 மாடுகள் உயிரிழந்துள்ளன.

அத்தோடு பலமாடுகள் காயமடைந்துள்ளமையும் தகவல் தெரிவித்துள்ளனர்.