நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, December 30, 2018

வவுனியாவில் 16 வருடங்கள் கழிந்து ஒன்றிணைந்த நண்பர்கள்! மகிழ்ச்சியின் உச்சத்தில்....

Sunday, December 30, 2018
Tagsவவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் 2002ம் ஆண்டு தரம் 11ல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிக்ழவு இன்று காலை 10மணியளவில் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள் அவர்களின் பாடசாலையின் நினைவுகளை மீட்டுப்பார்த்ததுடன் பின்னர் தவசிகுளத்தில் அமைந்துள்ள சேவாலங்கா பண்ணை விருந்தினர் மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் குறித்த நண்பர்கள் தமது பாடசாலையில் நண்பர்களையும் புலம்பெயர் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்கட்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் தீர்மாணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.