நடிகர் சென்ராயன் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற தாயா தாரமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 லட்சம் பரிசு தொகையை பெற்று கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் 1 இலட்சத்தை வெற்றி பெற்று, இறுதி நொடியில் கடைசி வினாவிற்கு சரியான பதில் வழங்கி இரண்டு மடங்கு பரிசு தொகைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இந்த வெற்றியை முழு குடும்பமும் கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
மேலும், வெற்றி பெற்ற நடிகர் சென்ராயன் குடும்பத்திற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
எனினும், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமே அதிகளவு ரசிகர்களை நடிகர் சென்ராயன் தன் வசப்படுத்தி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Note: Only a member of this blog may post a comment.