நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 22, 2018

மனித நேய மனிதர்களை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்...நீங்கள் மனிதநேயம் மிக்கவர் என்றால் இந்த பதிவை பகிருங்கள்!1) யார் உதவி என்று கேட்டாலும் அதன் உண்மைத்தன்மையும் அவசரத்தன்மையும் உணர்ந்து தம்மால் முடிந்ததை செய்வார்கள் 
2) மரியாதையாகவே எப்போதும் பேசிக்கொள்வார்கள்( நெருக்கமானவர்களை தவிர)
3)தமது படங்களை சமூக பொதுவெளியில் உதவிசெய்கின்றோம் என்று போட்டுக்காட்ட மாட்டார்கள்.
4) நாம் இவை எல்லாம் செய்தோம் என்று பொதுவெளியில் மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
   
       
   
 
5)எந்த உரையாலை மேற்கொண்டாலும் சமூகம் பற்றிய சிந்தனை அங்கே மேலோங்கியபடி இருக்கும். 
6)குடும்ப படங்களையும் தமது பிள்ளைகளின் படங்களையும்,தமது தனிப்படங்களையும் பொதுவெளியில் உலாவ விட மாட்டார்கள்.
7) சமூக வலைத்தளத்தை அறிவினை வளர்க்க பயன்படுத்துவார்கள்.
8) எழுத்துக்களில் நீதியும் வீச்சும் ஓர்மமும் சரியாக இருப்பின் சரியெனவும் பிழையாக இருப்பின் பிழையெனவும் நேரெதிரே கூறுவார்கள்.
9)ஒழுக்கம் என்பதனை மேன்மையாக காண்பார்கள் 
10)பிழை என்று யாராவது சுட்டிக்காட்டினால் சுட்டிகாட்டுபவரின் கருத்து சரியாக அமையுமிடத்து எந்த காழ்ப்புணர்ச்சியும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்...  
11)பணம் இருந்தால் மட்டுமே உதவி செய்யலாம் என்ற குறுகிய சிந்தனையில் வாழ மாட்டார்கள்.
   
       
   
 
12)எதிர்பாரா நேரத்தில்  சட்டென்று உடலால் உள்ளத்தால் செய்பவை அனைத்துமே உதவிகள் தான் என்று ஆழமாக நம்புவார்கள்.
13) தம்மால் முடிந்தவரை ஏதோ ஒரு உதவியினை செய்துகொண்டே இருப்பார்கள் 
14)நம்பிக்கை என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும். முடியாது என்று மற்றவர்கள் சொல்லும்போது புன்னகையுடன் முடியுமென செய்து காட்டுவார்கள்.
15) மற்றவர்களின் அவமதிப்புகளையும், துரோகங்களையும் வெற்றியின் படிகளாக எடுத்து செயற்படும் தன்மை கொண்டவர்கள்..

காவியா 
23.04
22/11/2018
லூட்டன்
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!