நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, November 20, 2018

அவசியம் வாசிக்கவும்,முடிந்தால் பகிரவும்! என் உள்ளம் குமுறி அழுத தருணம்நான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு(தெல்லிப்பளை)

கடந்த சில நாட்களாக நம் திருமலை மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும்,கவலையையும் நிறைத்தது
   
       
   
 
இன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன்

இங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட திருமலை மண்ணின் இளைஞர்கள் 
இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது 

இவர்கள்  பாவித்த போதைப்பொருள்கள்
கஞ்சா,குளிசைகள்,ஒடிக்கலோன்,ஒருவகை ஜெல்

சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம்,இல்லாமல் இருக்கலாம்  ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
அதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை ஆனால் அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எதிர்காலமும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும்,இறைவனிடத்தில் என் கடமைக்காகவுமே இதனை கேட்டுக்கொள்கிறேன்.
   
       
   
 
சாராயத்தைவிட பல மடங்கு மிக மோசமானதே இந்த கஞ்சாவும்,குளிசைகள் பாவனையும் இதன் விளைவு குருகிய காலங்களில் உங்கள் மூளையை மந்த நிலைக்கோ,மனநோயாளிகளாகவோ மாற்றும் என்பது நிச்சயம் உங்களைப்பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இதன் முகவர்களும்,விற்பனையாளர்களும் இதன் மூலம் உழைக்கும் பணம் உங்கள் பரம்பரையை நிச்சயம் நாசமாக்கும்,இப்படி பல இளைஞர்களை காவுகொள்ளும் ஒரு தொழில் தேவைதானா?
ஒரு சகோதரனாக உங்களிடம் வேண்டுகிறேன்,உங்கள் காலில் விழுந்தேனும் உங்களை கேட்க விரும்புகிறேன் அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த தொழிலை விடுவது மட்டுமல்லாது இவ்வளவு காலம் செய்த தவறுகளுக்காக நீங்களே இதனை தடுக்க முன் வந்து இளைஞர்களையும் எங்கள் எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்போம்


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!