நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 17, 2018

மீடூ சர்ச்சைக்கு பிறகு பாடகி சின்மயிக்கு வந்துள்ள மிகப்பெரிய பிரச்சனை...!#metoo

சமீபமாக சமூக வலைதளங்களையே #metoo என்ற வார்த்தையால் அதிர வைத்தவர் பிரபல பின்னனி பாடகி சின்மயி.

இவர், சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த '96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

   
       
   
 

இந்நிலையில், தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த சின்மயி தற்போது யூனியனிலிருந்து நீக்கியுளள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது...

நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.

நான் எனது சந்தாவை செலுத்தவில்லை எனவம் இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என்றும் எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.

மேலும், நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

   
       
   
 

எனினும், இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. தமிழில் '96 தான் எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. பை! பை!" என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!