நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, November 12, 2018

என்னுடைய மீடு ஸ்டோரியை அமீர் தவறாக சித்தரிக்கிறார்... லட்சுமி ராமகிருஷ்ணன் சாடல் பதிவு

தன்னுடைய மீ டூ ஸ்டோரியை இயக்குநர் அமீர் தவறாக சித்தரித்து பரப்பிக்கொண்டு வருவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் சகோதரர் அமீர் பேசியதை கேட்டேன். என்னைக் குறிப்பிட்டு சில வார்த்தைகள் விட்டிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன தருணத்தில் , பகையூட்டும் சாதி வன்மம் கொண்ட சகோதரர் அமீர் பேசிய வார்த்தைகள்தான் மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர் இப்பொழுது தொடுத்த சாதி விஷமார்ந்த அம்பு, ஒருநாள் அவரை நோக்கியும் பாயலாம். கை தட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக் கொண்டிருக்கும் சாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.

பாதிக்கப்பட்டவர்கள் சாதியை பார்த்து நான் குரல் கொடுப்பது இல்லை. என் மீது குற்றம்சாட்டும் சகோதரர்களே, உங்கள் முகத்திலிருந்து சாதி சாயம் பூசிய கண்ணாடியை நீக்கிவிட்டு பாருங்கள். பல ராஜலட்சுமிகளுக்காகவும், நந்தினிகளுக்காகவும் நான் துடித்து போனதும், குரல் கொடுத்ததும் உங்கள் கண்ணுக்கு தெரியும். மூன்று வருடங்களுக்கு முன்னால் பத்து பெண்களுக்கு பெண்கள் தினத்தன்று பாஜக அலுவலகத்தில் ஒரு விருது வழங்கப்பட்டது.

அந்த புகைப்படத்தை இப்பொழுது இணையத்தில் உலவவிட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அதேபோல் என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து பரப்பிக் கொண்டு வருகிறார்.

என் தந்தையார் எனக்கு ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. ராஜாஜி அவர்களையும், பெரியார் அவர்களையும் ஒரே மாதிரி நேசித்து, அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரிடமும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்த தந்தைக்கு பிறந்த மகள் நான். அவர் வகுத்த பாதையில்தான் என்றும் பயணிப்பேன்” என்று கூறியுள்ளார்.

To my friends in press & media 🙏, here is my statement against Director Ameer’s hate speech... pic.twitter.com/RT941D7q1f

— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 11, 2018
அமீர் கருத்து

முன்னதாக அமீர் மீடு குறித்து பேசிய போது, “நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மீ டூ-வில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தனர். ஆனால் இதே பிரச்சனையில் சிக்கி உயிரிழந்த சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு தரும் வகையில் ஏன் குரல் கொடுக்கவில்லை ராஜலட்சுமிக்கு நிகழ்ந்த கொடுமையை பேச முன்வரவில்லை.

இங்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழும் கொடுமைகள் குறித்துப் பேச யாரும் முன்வருவதில்லை. இதிலும் சாதியும் பார்க்கப் படுவதாக வேதனை தெரிவித்திருந்தார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!