நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 30, 2018

ஜான் ஆலன் உயிரோடு இருக்கிறாரா?... ஆதிவாசிகளால் கொலை செய்யப்படவில்லையா?...


அந்தமானில் சென்டினல் தீவில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட ஜான் ஆலன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெளி உலக தொடர்பின்றி இருக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றச்சென்ற அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் கொல்லப்பட்டார் என்பது கடந்த வாரம் அந்தமான் நிக்கோபார் தீவு பொலிசாரின் தகவல்.

ஜான் ஆலனை சட்டவிரோதமாக சென்டினல் தீவிற்கு அழைத்துச் சென்ற மீனவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் கொலைவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசாரால் ஜான் ஆலனின் சடலத்தைப் பார்க்கவோ, மீட்கவோ முடியவில்லை. அதனால் அவர் உயிரோடு இருக்கவே வாய்ப்பு உள்ளதாக அவரது தாய், நண்பர்கள், உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி ஜான் ஆலன் உயிரோடு திரும்ப அவரது தாயார், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் என்ற பெயரில் ஆதிவாசி மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!