Thursday, November 15, 2018

பண்டைய சங்க காலங்களில் ஆண்கள் உடல் வலிமையைச் சோதிக்கும் உருண்டைக்கல்!
இளந்தாரிக்கல்
அல்லது இளவட்டக்கல் என்று
அழைக்கப்படுகிறது!!திருமணமாக போகும்
ஆண்களுக்கும்,மன்னருடைய படைகளில்
பணியாற்ற தகுதியை நிர்ணயிக்கும்
தகுதி வாய்ந்த சோதனைக் களமாகவும்
இந்த இளவட்டக்கல் இருந்திருக்கிறது!!!

பதிவில்,கி.பி 1600-ம் ஆண்டைச் சேர்ந்த இளவட்டக்கல் பெரிய சோரிகை தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால்( இளவட்டம்+கல்)கண்டுபிடிக்கப்பட்டது.

முநாதிய காலங்களில் திருமணம் செய்திட காளையை அடக்குதல்,இளவட்டக்கல் தூக்குதல் போன்றவற்றில் வெல்ல வேண்டும்.காளையை அடக்கவும்,இளவட்டக்கல்லை தூக்கவும் ஏதுவாக அன்றையா இளைஞர்கள் திடகாத்திரமாக இருந்தர்.

இவட்டக்கல் 100 கிலோ எடை கொண்டது.வழுபழப்பாகா எந்த பிடிப்பும் இல்லாமல்,கைக்கு அகப்படாத முழு உருண்டை வடிவில் இருக்கும் இந்த இளவட்டகல்லுக்கு "கல்யாணக் கல்"என்ற பெயரும் உண்டு.சங்க காலத்தில இந்த இளவட்டக்கல்லை தூக்கினால்தான் கல்யாணமே நடக்கும்....
   
       
   
 
அன்றைய கால கட்டங்களில் திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் ஆண்மகனின் உடல் தகுதிமை சோதிக்கவும்,பெண் வீட்டாரால் இ்ந்த மாதிரியான சோதனைகள் கண்காணிக்கப்படும்.இதில் தேர்ந்த வீரனுக்கு மனோதிடமும்,உடல் திடமும் இருப்பது உறுதியளிக்கப்பட்டு மணமகனார் உடனடியாக நிச்சயம் நடைபெறும்.எதற்காக இந்த தேர்வு என்றால் மருத்துவ வசதிகள் பின்தங்கிய கால கட்டத்தில் மணமகன் நோய் தொற்றுக்கு ஆளாகி தங்கள் வீட்டுப் பெண் விரைவில் விதவையாகி விடக் கூடாது என்பதற்காக பெண் வீட்டாரிடையே இருந்த விழிப்புணர்வே காரணமாகும்.

இந்த நிகழ்வு முக்கியமாக கொண்டாட்ட தினங்களிலேயே முக்கியமாக நடக்கும்.முன்னோர்களின் ஒவ்வொரு சடங்களுக்கு பின்பும் ஒரு ஆழமான மதி நுட்பமும் அறிவியலும் இருந்ததை கண்டால்,தமிழர்கள் என்ற ஒன்றை வார்த்தை வெறும் சொல் அல்ல அது பாரம்பரியமும்,பண்பாடும் கொண்ட வாழ்க்கை என நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

இளம் வட்ட கல்லை சுமப்பதில் பல படிநிலைகள் உள்ளது:

முதில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இரு கைகளாலும் சேர்த்தனைத்து இலேசாக எழுந்து கல்லை முழங்காலுக்கு நகர்த்தி,பின்னர் முழுதாக நிமிர்ந்து பினனர் கொஞ்சம்,கொஞ்சமாக கல்லை நெஞ்சின் மீது ஏற்றி ,பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாக சுமக்க வேண்டும்.தோள்பட்டைக்கு கல் வந்து விட்டால்,அடுத்து கல்லோடு கோயிலை வலம் வருவது,குளத்தை வளம் வருவது என சாதனைகளை தொடரலாம்....

புது மாப்பிளைக்கு கருப்பட்டிப் பணியாரம் செய்து கொடுத்து அவரை இளவட்டக்கல்லை தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்தது.
   
       
   
 
தமிழரின் வீரத்திற்கும்,வீரத்திற்கும் சாட்சியாக திகழ்ந்த இந்த  இளவட்டக்கற்கள் இன்றைக்கு பல ஊர்களில் தம்மை தூக்கி சுமப்பார் யாரும் இல்லாமல் மண்ணில் பாதியளவு புதைந்து கிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்..இதற்கு காரணம்,சரியான விழிப்புணர்வு இல்லாததாலும்,நவீன அறிவியல் போன்ற டிவி,போன், ஐ பாட்  மற்றும் இன்டெர்நட் என தொடங்கி கேளிக்கை விடுதிகள் மற்றும் கிரிக்கெட் போன்ற மேலை நாடு மோகம்,அந்நியரின் ஆட்சி என கொஞ்சம் கொஞ்சமாக நம் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கறை இழந்து வருவது வேதனை தருகிறது....

இன்று ஒரு காஸ் சிலிண்டரை தூக்குவதற்கே இன்யை இளஞர்கள் கஷடப்படுவதற்கு இதுவே காரணங்களாகும்.....


0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka