நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 16, 2018

யாழில் நிகழ்ந்த சோகம்...முன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்த பெண்!

நீண்டகாலமாக குழந்தைபாக்கியத்தை எதிர்பார்த்து இருந்த தாய் ஒருவா் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்து உள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த இராஜசிறி மாலினி (49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தெரிவிக்கையில், குடும்ப பெண் திருமணம் ஆகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இன்றி இருந்த நிலையில் கடந்த வருடம் இந்தியா சென்று சிகிச்சை பெற்று கருத்தரித்து நாடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்தார்.

  அதன் பின்னர் சிறிது நேரத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.