நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, November 27, 2018

மைத்திரியை கொலை செய்து ஆறடி நிலத்தில் புதைப்பாரா மஹிந்த?

தான் தேர்தலில் தோற்றிருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்திருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்திய ஜனாதிபதி இன்று அவரையே பிரதமராகிவிட்டு ஆட்சிக்கு கொண்டுவந்த எம்மை கொலை சூழ்ச்சிக்காரர்கள் என குற்றம் சுமத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இந்தக் கருத்தினை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என் மீது குற்றம் சுமத்தினார். நான் அவ்வாறு கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்பதற்கு என்ன ஆதாரம் அவரிடம் உள்ளது. இந்தக் கருத்து மிகவும் மோசமானது.

ஆகவே ஜனாதிபதியின் இந்த கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.