நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 16, 2018

அவதானம் மக்களே!! புதிதாக பரவிவரும் “லிஸ்மானியஸ்“


மத்திய மாகாணத்தில் சிறிய வகை ஈக்களினால் தோல் நோயொன்று பரவுவதாகவும், இதனால் ஏற்படும் புண் நீண்ட நாள்களுக்கு குணமாகாமல் இருக்குமாயின், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெறுமாறும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

   
       
   
 

“லிஸ்மானியஸ்“ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த நோய் சிறிய வகை ஈயினால் பரவுவதாகவும், குறித்த ஈ கடித்ததன் பின்னர் தோலில் சிகப்பு நிற அடையாளம் ஒன்று ஏற்படுதால் ஏற்படும் அரிப்பையடுத்து குறித்த இடத்தில் புண் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 24 நோயாளர்கள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் மத்திய மாகாணத்தில் முதற்தடவையாக இவ்வாறான நோயொன்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார

   
       
   
 

வடமத்திய மாகாணத்திலிருந்து பரவியதாகத் தெரிவிக்கப்படும் இந்த நோய் தற்போது மத்திய மாகாணத்தில் பரவி வருவதாகவும், இது தொற்றா நோய் என்பதால், இது குறித்து அச்சமடைய வேண்டாமென்றும், இது குணப்படுத்தக் கூடிய நோயென்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!